Tuesday, December 7, 2010

அனிச்சம் மலர்

முகரவே மடியும் அனிச்சமே

நான் உன்னை விமர்சிப்பேன்

Sunday, June 6, 2010

பிரசவம்




இரவு நெருங்க
ஓடி ஒளிந்து கொண்ட பகல்
குமரி இரவை கற்ப்பழித்துவிட்டது
கருக்கல் பொழுதில்
பிரசவ வலியில் துடித்த இரவு
பெற்றெடுத்தது பகலை

Friday, May 21, 2010

ஈழம்

எலும்பாலான தூரிகை நுனியில்
எமது நரம்பே குஞ்சமென

எமது குருதித் தொட்டுத் தீட்டுகிறோம்
ஆயுதங்கள் கிழித்தெறிந்த
எம் கருப்புத்தோல் திரையாக

ஓவியத்திலிருந்தும்
உயிர் பெற்று எழுவோமென !!!!!!

Friday, May 7, 2010

கவிதை மேல் காதல்



என்றும் இல்லை மரணம்
எப்படி பிறந்தேன் என்று நினைவில்லை
நினைவுகளிலும் கனவுகள்
காற்றென உரசி செல்கின்றன
நாம் வாழும் கூடுகளை
கவிதைகளால் நெய்வோம் வா